Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செக்…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பணி நேரத்தில் செல்போனில் வீடியோ எடுத்து அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்வதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எம்.எஸ்  சுப்பிரமணியம் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் செல் போன் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்துவது தொடர்பான விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ள நீதிபதியான சுப்பிரமணியம் அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது நல்ல நடவடிக்கை அல்ல என்பதை குறிப்பிட்ட நீதிபதி சுப்பிரமணியம் 4 வாரங்களில் இந்த உத்தரவை நிறைவேற்றும் அரசு ஊழியர் விதிப்படி மருத்துவத் துறை செயலாளர் வழிகாட்டுதலை உருவாக்கி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்.

Categories

Tech |