Categories
விளையாட்டு

பேட்டிங், விக்கெட் கீப்பிங் இரண்டிலும் நான் கவனம் செலுத்துவேன்….. -ரிஷப் பண்ட்……!!!!!!

பெங்களூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது 238ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் வாயிலாக டெஸ்ட் தொடரை 2-0 என்று இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கிடையில் நான் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளேன். அதில் சில தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். இதனால் நான் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன். பெங்களூரிலுள்ள கடினமான ஆடுகளத்தில் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வதுடன் விளையாடுவது கடினமாக இருந்தது. ஆகவே விரைவாக ரன்களை அடிக்க நினைத்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அணி நிர்வாகமானது என்ன செய்ய வேண்டும் என கூறுகிறதோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |