உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யாவைச் சேர்ந்த 12 முக்கியமான ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் மரியுபோல் அருகே நடந்த தாக்குதலில் 31 வயதான கேப்டன் அலெக்ஸி குளுஷ்ஷாக் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதாவது ரஷ்ய ராணுவ உளவுத்துறையான GRU-வின் உயரதிகாரி உட்பட 3 முக்கிய ஜெனரல்கள் உள்பட 12 தளபதிகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராணுவ நடவடிக்கையின் ரகசியம் காரணமாக அதிகாரிகள் மரணம் தொடர்பான விவரத்தை வெளியிட முடியாது என்று ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் 12 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ள நிலையில், 500 பேர் மட்டுமே போரில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.