Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் மூலம் கடத்திய பொருள்…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கையில் மஞ்சள் பையுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சிப்ரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் பையில் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளார். இதை அடுத்து சிப்ரம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் என்பவருடன் இணைந்து கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்துக்கொண்டே வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் செலக்கரிச்சல் லட்சுமி நகரில் இருக்கும் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |