தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 5 குறைக்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு மாதம் 2000, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி முதல் நிழல் பொது பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. 2022- 23 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் 18ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பாமக தனது பொது நிழல் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:
தமிழ்நாடு 60 மாவட்டங்களாக பிரிக்கப்படும். பெட்ரோல் விலை ரூபாய் 5 குறைக்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று பல்வேறு முக்கிய அம்சங்கள் பாமக வெளியிட்டுள்ள நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும், சென்னையில் மாநகரப் பேருந்துகளில் அனைவருக்கும் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.