பள்ளி மாணவிகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாணவிகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் நபிஷா பானு, பள்ளி தலைமை ஆசிரியர் கலாநிதி, பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், ஐமாத் தலைவர் ராஜா முகமது, சுகாதார ஆய்வாளர் எழில்மாறன், பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் வசந்தி, மங்கையர்க்கரசி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சேவுகமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் ரெத்தினம், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் ஐமாத் தலைவர் ராஜாமுகமது 1,200 பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரையை வழங்கினர். மேலும் இந்த மாத்திரைகள் சிங்கம்புணரி பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து மையம், சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றிற்கு தொடர்ந்து வழங்கப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.