Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“எனக்கு கணவராகனும்னா இந்த தகுதி இருந்தால் போதும்”… சாய்பல்லவி ஓபன் டாக்…!!!

சாய்பல்லவி தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

பிரபல நடிகையான சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே நல்ல ரீச் ஆனார். இவர் கிளாமர் காட்டாமல் தன் நடிப்பின் திறமை மூலமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகின்றார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது சாய்பல்லவி பேசும்போது கூறியதாவது, “தனக்கு வரவேண்டிய கணவர் குறித்து பெரிதாக கனவுகள் இல்லை. நல்ல குணம் உள்ளவராகவும் எனக்காக நேரத்தை செலவிடுபவராகவும் உயரத்தில் என்னை விட கொஞ்சம் பெரிதாகவும் இருக்க வேண்டும்”. மேலும் “மொழி, இனம், கலர் என இந்த எந்த தகுதியும் தேவையில்லை” என கூறியுள்ளார். பொதுவாகவே பெண்கள் தனக்கு வரவேண்டிய கணவன் குறித்து பெரிதாக கனவு காண்பார்கள். ஆனால் சாய்பல்லவி பெரிதான எதிர்பார்ப்பு எதுவும் இன்றி இருக்கின்றார்.

Categories

Tech |