கியாஸ் கசிவு காரணமாக தகர கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி சாலியத் தெருவில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தகர கொட்டகையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமையல் செய்வதற்காக சிவகாமி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது கசிவு ஏற்பட்டு திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொட்டகையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீவிபத்தில் வீட்டு பத்திரம் , முக்கிய ஆவணம் மற்றும் 6,000 ரூபாய் பணம் போன்றவை எரிந்து நாசமாகியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.