Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விற்பனை…. பெட்டி கடையில் அதிரடி சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…!!

ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொய்யாமணி சீதபட்டியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள டீக்கடையில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக பழனிச்சாமி, மணிமுத்து, சுப்பிரமணி, அஞ்சலி தேவி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 4 செல்போன், ஒரு மடிக்கணினி, 3000 ரூபாய் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |