Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இனி வட்டித் தொகை கிடையாது… தபால் துறை அதிரடி அறிவிப்பு…!!!

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு வட்டித் தொகை செலுத்தப்படாது என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. 

தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் வெகுஜன மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரிஸ்க் இல்லாத முதலீடு, நல்ல வட்டி வருமானம் என்பதால் தபால் அலுவலக திட்டங்கள் ஊடுருவியுள்ளன.  இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், டெபாசிட் திட்டங்களுக்கு தபால் அலுவலகம் வட்டித் தொகையை செலுத்தாது என  தபால் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.

இனி வட்டி தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாகவே  செலுத்தப்படும்.  வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு இணைக்கப்படாமல் இருந்தால் அது தபால் அலுவலகம் வாயிலாகவும்,  காசோலை மூலமாக வட்டி தொகை செலுத்தப்படும் சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் மாத வருமான திட்டம் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள் பலர் வட்டித் தொகை பெறுவதற்கு இன்னும் சேமிப்பு கணக்கை இணைக்காமலே  இருப்பதாக தபால் துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள்  பலரும் வட்டி தொகை கிடைப்பது கூட தெரியாமல் இருப்பதாக காவல்துறை கூறியுள்ளது. எனவே தபால் அலுவலக திட்டங்களில்  முதலீடு செய்வோர் வட்டித் தொகை பெறுவதற்கு வங்கி கணக்கு இணைக்கும்படி கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |