Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“குறைந்த விலையில் தருகிறோம்” சைபர் கிரைம் போலீசில் புகார்…. கரூரில் பரபரப்பு….!!

நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிமெண்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமது அலியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் பிரபல சிமெண்ட் நிறுவனத்தின் மேலாளராக இருப்பதாகவும், 850 சிமெண்ட் மூட்டைகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி அதற்குரிய விலைப்பட்டியலை முகமது அலி வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை உண்மை என நம்பிய முகமது அலி அவர்கள் கூறிய வங்கி கணக்கில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி சிமெண்ட் மூட்டைகள் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர் மர்ம நபரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது அலி சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அம்சவேணி கம்பெனி மேலாளர் எனக் கூறி நூதன முறையில் 2 1/4 லட்ச ரூபாய் திருடிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |