லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சாண்டி வழக்கம்போல் சுவரொட்டிகளை ஒட்டும் பணிக்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது திடீரென சைக்கிள் பழுதடைந்தது. இதனால் அங்குள்ள ஒரு கடை ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி பழுது பார்க்க நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென பிச்சாண்டி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பிச்சாண்டியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக பிச்சாண்டியை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிச்சாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பிச்சாண்டியின் மனைவி நிர்மலா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.