Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“உங்களுக்கு அந்த அருகதை இல்ல”… ஆர்.கே.சுரேஷுக்கு பதிலடி தந்த ப்ளூ சட்டை…!!!

ஆர்.கே.சுரேஷின் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றது. பல விமர்சகர்களும் விமர்சித்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ப்ளூ சட்டை, அவரின் எல்லையை மீறி உருவத்தை கேலி செய்து விமர்சித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் இவரின் மேல் கோபம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரான தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், “அஜித்தை விமரிசிக்க நீ யார்? நீ என்ன பெரிய வெண்ணையா?” என்று கடுமையாக வெளுத்து வாங்கினார். அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக ப்ளூ சட்டை ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “புலிகுத்தி பாண்டி படத்தில் உங்கள் ஜட்டியை கலட்டி ஹீரோயின் மீது வீசி பெண்களை கொச்சைப்படுத்திய வெண்ண சுரேஷ் அவர்களே. இதுபோன்ற கேவலமான செயல்களில் நடிக்காமல் நாகரிகம் காக்க வேண்டும். இதுப்பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை வெண்ணை ரமேஷ்-மதுரை மாவட்டம்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |