Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. கருணைத்தொகை ரூ.17,780…. 1 ஆண்டு வரை விடுமுறை…..!!!!!

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனர். எனினும் கொரோனா காலத்தில் கூட பொதுமக்களுக்காக அரசு ஊழியர்கள் பணிபுரிந்தனர். இந்த நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 11-வது ஊதிய திருத்தக் குழுவின் பரிந்துரைகளின்படி,  மாநில அரசு ஊழியர்களுக்கு பல புதிய சலுகைகளை புதன்கிழமை அறிவித்தது. அப்போது ஆந்திரப்பிரதேச சிறப்பு தலைமை செயலாளர் ஷம்ஷேர் சிங் ராவத், குழந்தை தத்தெடுப்பு, குழந்தை பராமரிப்பு, ஊனமுற்ற குழந்தை பராமரிப்பு மற்றும் பல நோய்களுக்கான கருணைத்தொகை குறித்து ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து “GO” ஐ வெளியிட்டார்.

குழந்தை தத்தெடுப்பு முறையை ஊக்குவிக்கும் அடிப்படையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பெற்ற ஊழியர் எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்கலாம் மற்றும் குழந்தை பராமரிப்புக்காக எத்தனை நாட்கள் விடுப்பு வழங்கலாம், ஊனமுற்ற ஊழியர்களுக்கு விடுப்பு என்பது தொடர்பாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச சிறப்பு தலைமை செயலாளர் ஷம்ஷேர் சிங் ராவத் உத்தரவின் அடிப்படையில் குழந்தையை தத்தெடுக்கும் ஊழியர் 180 நாட்கள் வரை விடுப்பு எடுத்து விடுமுறை நாட்களிலும் முழு ஊதியத்தை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அத்தகைய பணியாளர்கள் இந்த விடுமுறை நாட்களை பிற விடுமுறை நாட்களுடன் இணைத்து பயன்படுத்திக்கொள்ள அரசு வழிவகை செய்து இருக்கிறது.

# தத்தெடுக்கப்பட்ட குழந்தை ஒரு மாதத்திற்கும் குறைவாக இருந்தால் பணியாளருக்கான விடுப்பு ஒரு ஆண்டு வரை இருக்கும்.

# தத்தெடுக்கப்பட்ட குழந்தை 6 மாதத்திற்கு மேல் இருந்தால் அத்தகைய ஊழியர்கள் 6 மாதங்கள் முதல் 7 மாதங்கள் வரை விடுப்பு எடுத்து கொள்ளலாம்.

# இதையடுத்து குழந்தை பராமரிப்பு விடுமுறையை 60 நாட்களிலிருந்து 180 நாட்களாக அரசு உயர்த்தி இருக்கிறது.

# GO-ன் அடிப்படையில் ஊனமுற்ற ஊழியர்கள் தங்களது செயற்கை உறுப்புகளை மாற்றுவதற்காக வருடத்திற்கு 7 நாட்கள் வரையிலும் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறலாம்.

# GO-ன் படி அதிக ஆபத்துள்ள வார்டுகளில் பணிபுரியும் செவிலியர்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம். உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சை பெறும் ஊழியர்களுக்கு கருணைத்தொகை வழங்குவதாகவும் அறிவித்து இருக்கிறது.

# 35,570 வரையிலும் அடிப்படை ஊதியம்பெறும் அரசிதழ் அல்லாத ஊழியர்களுக்கு ரூபாய் 11,560 முதல் ரூபாய் 17,780 வரையிலும், கடைசி தர ஊழியர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலும் வழங்கப்படும்.

Categories

Tech |