ஓய்வுபெற்ற அலுவலர்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வி.ஆர். பி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழுக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கௌதமன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் வைத்து ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு மருத்துவ பணியை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதன்பிறகு குடும்ப பாதுகாப்பு நிதியை 1 1/2 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும், சங்க உறுப்பினர்களின் இறுதிச்சடங்குக்கு ரூபாய் 5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு வி.ஆர்.பி பள்ளி தாளாளர் சோழன் நினைவு பரிசு வழங்கினார். இந்த விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாதவன், ஊரக வளர்ச்சித் துறையின் ஓய்வு பெற்ற மேலாளர் திருநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.