பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியரை மாணவர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பூமாரி என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அனைத்து மாணவ மாணவிகளிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பூமாரி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெம்பூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இட மாறுதல் காரணமாக பூமாரி பள்ளியை விட்டு பிரிந்து செல்லும் செய்தியை அறிந்த மாணவர்கள் திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனையடுத்து அனைவரும் கண்ணீர் மல்க ஆசிரியரை வழி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.