கோட்டூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருமருகல் அருகிலுள்ள கோட்டூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை வகித்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் முன்னிலை வகித்த இந்த முகாமில் டாக்டர் ஸ்ரீதர் கால்நடை ஆய்வாளர் முருகேசன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமரன் வரவேற்றுள்ளார். இந்த முகாமில் 350க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் அளித்தனர். இதற்கு முன்னதாக கால்நடைகளை நல்ல முறையில் பராமரித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.