தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் பதிய வேண்டிய மிகப்பெரிய வெற்றியை (100-க்கு 99 சதவீதம் வெற்றி) திமுக பெற்றுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதுவரையும் நாமே இந்த வெற்றியை பார்த்ததில்லை. இந்த வெற்றியை மனதில் வைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களின் கடமையை ஆற்ற வேண்டும். தற்போது நமக்கு ஏதாவது ஒன்று என்றால் திமுகக்காரன் ஓடோடி வருவான் என்று நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள் என்று முதல்வர் கூறினார்..