Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உஷாரா இருங்க மக்களே..! கண்பார்வை போய்டும்… கோவையில சூப்பரான பேரணி …!!

கோயம்புத்தூர்  மாவட்டத்தில் கண் அழுத்த  நோய்  குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஒவ்வாரு ஆண்டும் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து நேற்று தனியார் மருத்துவமனை சார்பில்  கோயம்புத்தூரில் ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் நர்சு மற்றும் மருத்துவ பணியாளர்கள் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு நடந்து சென்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணி பற்றி டாக்டர்கள் கூறுகையில், அதாவது இந்தியாவில் கண் அழுத்த நோய் பாதிப்பு 2.6% ஆகும். ஆனால் கண் அழுத்த  நோய் இருப்பவர்கள்  7 சதவீதம் மட்டுமே தங்களுக்கு இருப்பதை அறிந்து கொண்டு அவர்கள் அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கண் அழுத்தநோய் ஏற்பட்டால் கண் பார்வையின் நரம்பை சேதப்படுத்தி  நிரந்தர கண்பார்வை இழக்க வழிவகுக்கும் இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது. கண் அழுத்த நோய் அறிகுறி தெரிந்து கொள்ளவும், அதனை கட்டுப்படுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டதாக டாக்டர்கள் கூறினர்.

 

Categories

Tech |