இந்தோனேசியாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்தோனேஷியாவில் லோடிங் சுமத்ரா தீவின் மேற்குக் கடற்கரையில் இன்று அதிகாலை சுமார் 04:06 மணியளவில் கடல் மட்டத்தின் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் உடனடியாக தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறினார்கள். இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.