மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் 22 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள குறவன்குளம் கிராமத்தில் வேங்கையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த வேங்கையன் தனது மனைவியை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வேங்கையனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அய்யூர் பிரிவு சாலை பகுதியில் பதுங்கி இருந்த வேங்கையனை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.