கீவ் நகரை ரஷ்ய படைகள் எந்த நேரத்திலும் நெருங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 18 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்ய படைகள் கீவ் நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் அடுத்த சில நாட்களில் தலைநகரை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிறுகிழமை அன்று தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் மக்களும், ராணுவத்தினரும் கலந்து கொண்டனர்.
அதில் உக்ரைன் வீரர்களின் துப்பாக்கிகளுக்கு ராணுவ மதகுருமார்கள் ஆசீர்வாதம் அளித்துள்ளனர். மேலும் கீவ் நகர வீதிகளில் தேவாலயத்தின் மணி மற்றும் வான் தாக்குதல் எச்சரிக்கும் சைரன் ஓசையும் இணைந்து ஓளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.