வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்டன். இவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து புதிதாக கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். இதற்காக மலையன் நகரை சேர்ந்த செல்வம் என்னும் தொழிலாளி வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் .
செல்வம் சுவரை தகர்க்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து அவர் மேல் விழுந்தது. இதில் படுகாயமடைந்த செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.