Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை கேட்ட தகவல்… தமிழக அரசு அளித்த விளக்கம்…!!!!

ஜாதி குறித்த தகவல்கள் எதையும் பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளியில் சாதி குறித்த கேள்வி கேட்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவர பதிவேட்டில் அவர்களின் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் குழந்தைகள் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்களா , பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்களா , பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களா , அல்லது சிறுபான்மையினர் அல்லது முற்பட்ட வகுப்பை சார்ந்தவர்களா  என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தையின் சாதியை கேட்பதற்கும் அக்குழந்தை சார்ந்த வகுப்பை கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது. இது வெகு காலமாக பின்பற்றிவரும் நடைமுறை விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி உதவித் தொகை உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்களுக்கான பலன்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தகவல் கேட்கப்படுகிறது.என பள்ளி கல்வி துறை  விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் சாதியப் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற தகவல் தெரிந்தால் உடனடியாக பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது . விளிம்பு நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கென கேட்கப்படும் விவரங்களை திரித்து மாணவர்களின் சாதியை பள்ளிக் கல்வித் துறை கேட்டது போன்றதொரு தோற்றத்தைத் தர முயல்வது அநீதியானதும் முற்றிலும் பொய்யானதும் தமிழக அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு முரணானதுமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |