Categories
தேசிய செய்திகள்

“அம்மா தூங்குறாங்க” இறந்த தாயுடன் 3 நாள்…. 10 வயது சிறுவனின் செயல்….!!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர்  ராஜலட்சுமி. இவர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் ஸ்ரீதர் ரெட்டி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார் . இவர்களுக்கு ஷாம் கிஷோர் என்ற 10 வயதான மகன்  உள்ளார். ராஜலட்சுமி ஸ்ரீதர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவன் மனைவி   இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர்.

ராஜலட்சுமி  உடல் நிலை சரியில்லாததால் இரண்டு நாட்கள் கல்லூரிக்கு விடுப்பு எடுக்க வேண்டும் என்று நினைத்துவிட்டு இரவில் ஓய்வு எடுப்பதற்காக உறங்கிய நிலையில் ராஜலட்சுமி திடீரென்று கீழே விழுந்து இறந்துள்ளார். மறுநாள் காலையில் மகன் கிஷோர் அம்மாவை தொந்தரவு பண்ண கூடாது என்று நினைத்து மூன்று நாட்களாக பிரிட்ஜில் வைத்து இருந்த பிஸ்கட் மற்றும் பழங்களை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளான்.

ஆனால் 4ஆவது நாள் துர்நாற்றம் வீச அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கிஷோரிடம் கேட்டபோது அம்மா தூங்கிக் கொண்டிருக்கிறார் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நான் நினைத்திருந்தேன் என்று கூறினான். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

Categories

Tech |