Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென வெடித்த டயர்…. நிலைத்தடுமாறிய கார்…. போலீஸ் விசாரணை…!!

கார் டயர் வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து உள்ளனர். இவர்கள் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த போது திண்டிவனம் அருகே திடீரென கார் டயர் வெடித்தது.  இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது.  இதில் காரில் வந்த யஷ்வந்த் ஜெகநாத், மிருது ராஜ், சத்ய பிரபு, மனோஜ், தருண் குமார் ஆகிய 5 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒலக்கூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |