Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவியை கர்பமாக்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் கிராமத்தில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கும் அஜித்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் அஜீத்குமார் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் தற்போது மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இதைதெரிந்து கொண்ட மாணவியின் பெற்றோர் அஜித்குமார் மீது விழுப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |