தொழிலாளியிடம் தகராறு செய்த தந்தையை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் தொழிலாளியான சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதுகுறித்து சுந்தரமூர்த்தி ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மகன் செல்வக்குமார் ஆகியோர் சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுந்தர மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பழனிச்சாமி மற்றும் செல்வம் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.