Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

ராதே ஷ்யாம்… “எனது அழகான குழுவுக்கு”… நன்றி தெரிவித்த பூஜா ஹெக்டே…!!!

ராதே ஷ்யாம் மேக்கப் குழுவின் புகைப்படத்தை பகிர்ந்து பூஜா ஹெக்டே நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் நடிகரான பிரபாஸ் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் ராதே ஷ்யாம் . பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் மிகவும் பிரபலமாகியுள்ளார்.  ராதே ஷ்யாம் திரைப்படம் குறித்து தற்போது நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் காதலுக்கு முக்கியத்துவம் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மிகவும் அழகாகவும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளார். இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது மேக்கப் குழுவுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் கூறியுள்ளதாவது, “எனது அழகான குழுவுக்கு… ராதே ஷ்யாம் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மேக்கப் கலைஞர்களுக்கு எனது மாபெரும் நன்றி. தினமும் படப்பிடிப்பு தளத்தில் நேர்மறை ஆற்றல் செட்டில் கொண்டு வந்ததற்கு… ஒவ்வொரு நாளும் எனக்கு ஆதரவாக இருந்ததற்கு… சோர்வடையும் நாட்களில் எனக்கு பக்கபலமாக இருந்ததற்கு மிகவும் நன்றி. என் சிரிப்புக்கும், என் சக்திக்கு காரணம் நீங்கள். என்னைக் கவனித்துக் கொண்டதற்கு நன்றி. படத்தின் ரிசல்ட் எதுவாக இருந்தாலும் நீங்கள் எனக்கு செய்த அனைத்துக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் பூஜாஹெக்டே.

Categories

Tech |