Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு விஷயத்தில்…. இதோ பிரச்சனை விரைவில்…. வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் ஒரு பான் கார்டை  உடனடியாக வருமான வரித்துறையினரிடம் சரண்டர் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆதார் கார்டு எப்படி, ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. அதைப்போல் பான் கார்டும் மிக முக்கியமான ஆவணங்களுள் ஒன்றாகி உள்ளது. இந்நிலையில் இந்த கார்டு இல்லாமல் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் நடக்காது. மேலும் வங்கியில் பண பரிவர்த்தனை செய்வதற்கும் மற்றும் கணக்கு தொடங்குவதற்கும் மிக அவசியமானது ஆகும். அதிலும் குறிப்பாக பான் கார்டு, ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மார்ச் 31ஆம் தேதி பான் கார்டை, ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி நாளாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பான் கார்டு சம்பந்தப்பட்ட சில தவறான செயல்களுக்கு அபராதமாக ரூ.10,000 விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே பான் எண்ணை எதிலும் பதிவிடும் போது சரியான முறையில், அதில் உள்ள பத்து இலக்க எண்ணையும் கவனமாக நிரப்ப வேண்டும். இல்லையெனில் ஏதேனும் எழுத்துப் பிழை ஏற்பட்டால் அதற்கு கடுமையான தண்டனை கிடைக்கலாம் எனவும் சில நேரங்களில் சிறைத் தண்டனை கூட கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் அதற்கு ரூ 10,000 வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் வங்கி கணக்கையும் முடக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே இரண்டு பான் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக வருமானவரித் துறையிடம் ஒரு பான் கார்டை ஒப்படைக்க வேண்டும் என வருமான வரி சட்டம் 1961 பிரிவு 272B  வலியுறுத்திக் கூறுகிறது.

இந்நிலையில் இவ்வாறு பான் கார்டு ஒப்படைப்பதற்கு சிறந்த எளிமையான வழி ஒன்று உள்ளது. அதன்படி அதற்கான ஒரு விண்ணப்ப படிவம் ஒன்றில், அதை நீங்கள் நிரப்பி வருமானவரி இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன்பின் அதில்  ‘Changes Or Correction in PAN Data’ என்ற வசதியின் கீழ் இந்த வேலையை மிகவும் எளிமையாக முடித்து விடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |