சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,393 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக தான் கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய சுகாதார ஆணையம் கூறியதாவது “புதிதாக 3,393 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் முந்தைய நாளை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்றும் 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுவருவதாகவும்” கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சீன அதிகாரிகள் 19 மாநிலங்களில் ஓமைக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா வைரஸ்கள் அதிகரித்து வருவதால் ஷாங்காயில் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஜிலின் நகரத்தில் சில பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மற்றும் நூற்றுக்கணக்கான சுற்றுப்புறங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சீனாவில் ‘பூஜ்ஜிய-கோவிட்’ கொள்கையை பின்பற்றி வருகின்றனர். ஆனால் மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாடு இந்த அணுகுமுறைக்கு சவால் விடுகிறது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,466ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் இதுவரை 4636 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.