மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் மேல பெருவிலை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சாமித்தோப்புக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புன்னார்குளம் அருகே சென்ற போது அவ்வழியே வேகமாக வந்த கார் லட்சுமணனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் லட்சுமணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த தீயணைப்பு துறையினர் லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லட்சுமணனின் மனைவி ராஜாத்தி அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.