பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ராமன்புதூர் கோல்டன் தெருவில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த கோபுரத்தை அமைக்ககூடாது என எதிர்ப்பு வந்தனர். இந்நிலையில் இந்த பணி நேற்று தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நேசமணி நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.