பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து வேளாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பள்ளி தலைமையாசிரியர் முத்துதுறை தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய், ஆசிரியர் பயிற்றுநர் சிவசங்கரி, பள்ளி மேலாண்மை குழு மாவட்டம் கருத்தாளர் ஆரோக்கியசாமி, சுய உதவி குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வம், ஜேம்ஸ், ஆசிரியர் ராஜசேகர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மேலாண்மை குழு மாவட்ட கருத்தாளர் ஆரோக்கியசாமி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.