மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள் ஆக இருக்கும். வளர்ச்சி கூடும், வாய்ப்புகள் வந்து சேரும், வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும், கல்யாணக் கனவுகள் நனவாகும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று விழிப்புடன் இருப்பது எப்போதுமே நல்லது. சுப செலவுகள் கொஞ்சம் இருக்கும், கையிருப்பு கரையும், தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
நண்பர்களுடன் சுமுகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம், அனைத்தும் சரியாகும். பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். இன்று பணவரவில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.