உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் பேட்டியளித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போர் உலக நாடுகளிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ரஷ்யா நாளுக்கு நாள் உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்து வருவதால் மக்கள் குழிக்குள் பதுங்கிய நிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உக்ரைன் அதிபர் பேசுகையில் “இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளார். குண்டுகளை வீசுவதும் மக்களை கொன்று நகரத்தை கைப்பற்றுவதும் தான் ரஷ்ய படையின் குறிக்கோள் என்றால் வரட்டும் . தலைநகரின் கலாச்சார வரலாற்றையும், ஐரோப்பாவின் வரலாற்றையும் அழித்தால் மட்டுமே அவர்கள் தலை நகருக்குள் நுழைய முடியும்” என்று கூறியுள்ளார்.