Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு ஒழுங்கா போ…. தூக்கில் தொங்கிய மாணவன்…. கதறி அழும் பெற்றோர்….!!

பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள முத்துகாப்பட்டியில் சலியன் என்பவர் வசித்து வருகின்றார். செங்கல் சூளையில் வேலை பார்க்கும் இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதில் 2-வது மகன் மணிகண்டன் (14) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோர் அவரை நன்றாகப் படிக்கும் படியும், பள்ளிக்கு செல்லும் படியும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் அப்பகுதியில் உள்ள புளிய மரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவரது பெற்றோர் மகனின் உடலை கண்டு கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |