Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி… இருமலா…? விடைபெறுங்கள் இன்றே… 12 எளிய குறிப்புகள்..!!

சளி இருமல் மிக வேகமாக குறைவதற்கு சில மருத்துவ குறிப்புகள்:

 

1.ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும், பிறகு அதை குடித்தால் இருமல் சளி குணமாகும்.

2.தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கும், தொண்டையில் உறுத்தலை நீக்குவதற்கும் சளியை குறைப்பதற்கும் இந்த உப்பு நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

3.இஞ்சி வறட்டு இருமலை எளிதில் நிறுத்த கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து அதில் சிறிது உப்பைத் தூவி, உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியுடன் துளசியையும் சேர்த்துக் கொண்டால் சளி இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

4.முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் உடனே நிற்கும்.

5.வெற்றிலை சாறு எடுத்து அதைத் தேனில் கலந்து குடித்துவந்தால் சளியில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

6.புதினா இலை ஒரு கைப்பிடி, மிளகு மூன்று இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி இருமல் நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

7.மிளகு, பூண்டு, தக்காளி, கொத்தமல்லி சேர்த்து ரசம் வைத்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் சளி மற்றும் நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

8.வறட்டு இருமல் குணமாக பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவை கலந்து சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும்.

9.மஞ்சளை தீயில் சுட்டு நுகர்ந்தால் தலைவலி, மூக்கடைப்பு, தலைபாரம் போன்றவை நீங்கும்.

10.வெங்காயச்சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால் மார்பு சளி இருமல் குணமாகும்.

11.வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண், இருமல் குணமாகும்.

12. 5 கிராம் சித்தரத்தை எடுத்துக்கொண்டு அதோடு உலர்ந்த திராட்சை சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் இருமல் குணமாகும்.

Categories

Tech |