பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபர் திடீரென கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் அருகே தென்பசாரால் பகுதியில் வட மாநில வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த வாலிபர் மதுபோதையில் அந்த பகுதியில் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்த அங்கு ரோந்து பணியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த வடமாநில வாலிபரை கைது செய்து காவல்துறைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது அந்த வாலிபர் காவல்துறையினரிமிருந்து தப்பித்து ஓடி உள்ளார். அவரை விடாமல் காவல்துறையினரும் துரத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் அவனம்பட்டு பகுதியில் இருந்த ஒரு கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனைபார்த்த காவல்துறையினர் அவரை மேலே வருமாறு பலமுறை எச்சரித்துள்ளனர். அதற்கு வாலிபர் மறுப்பு தெரிவிக்கவே தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு அந்த வாலிபரை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் வாலிபரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.