Categories
மாநில செய்திகள்

சம்பளத்திற்கு வந்த புதிய சிக்கல்…. தூய்மை பணியாளர்கள் ஷாக்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வழக்கம்போல பணிகள் தொடங்கின. அவ்வகையில் மயிலாடுதுறை மாநகராட்சியில் பணிகள் மும்முரமாக தொடங்கியிருக்கும் நிலையில் சம்பளப் பிரச்னை தலைதூக்கி உள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் முப்பத்தியாறு வார்டுகள் உள்ளது. அதில் 80 க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு தினக்கூலி 340 ரூபாய் வழங்கப்படும் நிலையில் அதில் பத்து ரூபாய் சேம நல நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாத சம்பளம் இன்னும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட வில்லை என்றும் அதனால் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருவதாகவும் தொழிலாளர்கள் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் சம்பள பில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதுமட்டுமல்லாமல் பிஎஃப் பிடிமானம் செய்யப்பட்டதற்கான கணக்கு தரவேண்டும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அரசு விரைவில் செவிசாய்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |