Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அமீர் காதல் கதை… முற்றுப்புள்ளி வைத்த பாவ்னி… என்னம்மா இப்படி பண்ணிட்டியே…!!!

அமீர் எனக்கு நல்ல நண்பர் அதை தவிர்த்து வேறு ஒன்றுமில்லை என ஒரு நிகழ்ச்சியில் கூறிய பாவ்னி.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். பிக்பாக்ஸ் நிகழ்ச்சி ஐந்து சீசனாக ஒளிபரப்பாகி உள்ளது. இதில் கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் அமீர் தனது காதலை பாவ்னியிடம் தெரிவித்திருந்தார். ஆனால் பாவ்னி எந்த இடத்திலும் அவரை காதலிப்பதாக தெரியப்படுத்தியதில்லை. ஆனால் இணையதள வாசிகளோ இதை உண்மையான காதல் கதை போல் பாவித்தனர். இவர்கள் எங்கு சென்றாலும் இந்த கேள்வியை எழுப்பப்பட்ட வந்தது. இந்நிலையில் பாவ்னி மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள கல்லூரிக்கு சென்றிருந்தார்.

நிகழ்ச்சியில் பாவ்னி தனது பிக்பாக்ஸ் அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். பிறகு தனது ஓட்டு போடுபவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார். பெண்கள் தினத்தையொட்டி பேசிய பாவ்னி பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகும் கணவனைச் சார்ந்து இருக்காமல் தானே தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார். கடைசியாக மாணவர்கள் சிலர் அமீருடன் திருமணம் குறித்து கேள்வி கேட்டாரகள். அதற்கு பாவ்னி தனக்குத் வீட்டில் தற்போது மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அமீர் தனக்கு ஒரு நல்ல நண்பர். அதைத் தவிர்த்து வேறு ஒன்றுமில்லை என கூறியுள்ளார் பாவ்னி.

Categories

Tech |