Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம்…. கலந்துகொண்ட வண்டிகள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!

மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டியின்  உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி வல்லநாட்டு கருப்பர்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று செம்பனூர்-சொக்கநாதபுரம் சாலையில் சின்ன மாட்டு வண்டி பந்தயம் மற்றும்  பெரிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளில் போட்டிகள்  நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து கொண்ட 9 வண்டிகளில்  1-வது  பரிசை புதுப்பட்டி  சின்னசாமி வண்டியும்  , 2-வது பரிசை  தரகம்பட்டி வைத்தியா  வண்டியும், 3-வது பரிசை கம்பம் பாலு வண்டியும், 4-வது பரிசை மலம்பட்டி காயத்ரி ஸ்டோர் வண்டியும் பெற்றுள்ளது.

இதனையடுத்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து  28 வண்டிகளில் 1-வது  பரிசை கண்ணதாசன்  வண்டியும், 2-வது பரிசை செம்பனூர்  சரவணன் வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி சிவா வண்டியும், 4-வது பரிசை பெருமாள்பட்டி பிரான்மலை சுவாமி வண்டியும் பெற்றுள்ளது. அதன் பின்னர் நடைபெற்ற  2-வது சுற்றில் 1-வது பரிசை பிரசாந்த்   மொபைல் வண்டியும், 2-வது பரிசை தஞ்சாவூர் திருமுருகன் வண்டியும்,3-வது பரிசை விழநேரி  ராமநாதன் வண்டியும், 4-வது பரிசை  முத்துகருப்பன் வண்டியும் பெற்றுள்ளது . இதனையடுத்து வெற்றி பெற்ற வண்டியின் உரிமையாளர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளனர்

Categories

Tech |