Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு… “விஷால் உடனடியாக பணம் செலுத்த வேண்டும்”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

விஷால் லைகா நிறுவனத்திடம் வாங்கிய தொகைக்காக மூன்று வாரத்திற்குள் தொகையை டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்நிலையில் விஷால் லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூபாய் 15 கோடி வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால், தயாரிப்பாளர் அன்புசெழியனிடம் ₹21.29 கோடி கடனாக பெற்றுள்ளார்.

-அந்தக் கடனை லைக்கா நிறுவனம் அன்பு செழியனிடம் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தருமாறு லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் தொகையை டெபாசிட் செய்து ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |