ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதியை தடை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்யா பெலாரஸ் போன்ற நாடுகளுக்கு இடையே ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது பற்றி அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சில மதுபானங்கள் புகையிலை பொருட்கள், ஆடைகள், நகைகள், வாகனங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் போன்ற ஆடம்பர பொருட்கள் ஏற்றுமதி மற்றும் பரிமாற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என குறிப்பிடப்பிட்டிருக்கிறது.
உக்ரைன் மீதான போர் ஐரோப்பா மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளைக் ஒன்று எனவும் கூறியுள்ளது. மேலும் ரஷ்ய மக்களை சுரண்டுவது மூலம் புதினும் அவரை சார்ந்தவர்களும் பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டதாகவும் ரஷ்யா தனிமைப் படுத்தப்பட்டுள்ளதை நினைவூட்ட விரும்புவதாகவும் அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ தெரிவித்துள்ளார்.