கொரோனா 3-வது அலையின் தாக்கம் இந்தியாவில் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அதாவது தினமும் 4 ஆயிரத்துக்கு கீழ் சரிந்து உள்ளது. இந்நிலையில் 3-வது அலை பாதிப்பு குறைந்தாலும் பொதுமக்கள் டிசம்பர் வரை முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கோவிட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அக்குழுவின் அதிகாரிகள் கூறியதாவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை கட்டாயமாக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்தாலும் குறைந்தபட்சம் இந்த வருடம் இறுதி வரை முகக்கவசம் அணிந்து கொள்ளவேண்டும்.
கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிவிட்டதாக நாங்கள் நம்பும் வரையிலும் மக்கள் முகக்கவசம் அணிவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்களது கருத்து ஆகும். ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கொரோனாவின் 4-வது அலை குறித்த கணிப்புகள் இருக்கின்றன. அதன்பின் குறைந்தது 2 மாதங்கள் வரை கொரோனா பாதுகாப்பு விதிகள் தொடர வேண்டும். இதன் காரணமாக மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். இதனால் முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வேறுவழியில்லை என்று அதிகாரிகள் கூறினர்.