Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே உஷார்….! பழைய நாணயத்திற்கு கொட்டும் பணம்..? ஆர்பிஐ எச்சரிக்கை…!!!!

இந்திய ரிசர்வ் வங்கி பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க அல்லது விற்பதற்கான ஏமாற்று திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் போன்றவற்றின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களின் மூலம் மக்களை விற்குமாறு வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு கட்டணங்கள், கமிஷன்கள் அல்லது வரிகள் வசூலிக்கப்படுகின்றன.

ஆனால் இது போன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கி ஈடுபடுவதில்லை. மேலும் யாரிடமும் இதுபோன்ற கட்டணங்கள் அல்லது கமிஷன்கள் என ஒருபோதும் கேட்பதில்லை எனவும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் இது போன்ற ஏமாற்று திட்டங்களுக்கு பலியாக வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கியானது எந்த ஒரு வணிகத்திற்கோ,  நிறுவனத்திற்கோ அல்லது தனி நபருக்கோ அதன் சார்பாக இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு எவ்விதக் கட்டணமும் ,கமிஷனும் விதிப்பதற்கு எந்த ஒரு அதிகாரத்தையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |