Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாய்க்கு மாத்திரை வாங்க சென்ற பெண்…. துடிதுடித்து இறந்த சோகம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஈஸ்வரி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாய்க்கு மாத்திரை வாங்குவதற்காக ஈஸ்வரி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது கோபிநாத் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஈஸ்வரின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |