மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள விலை சரல்விளை பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வமணி அந்த பகுதியில் இருக்கும் ஆர்.சி ஆலயம் அருகே இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொச்சிகோடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.