Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…. இனி விடுமுறை கிடையாது…!!!

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டின் இறுதி மாதமாக மார்ச் மாதம் உள்ளது. எனவே மாநிலம் முழுவதும் பதிவு அலுவலகங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறாததால் ,ஒத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப் பதிவுகள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் அடுத்த ஆண்டுக்கான (2022- 23) நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகரித்து வரும் ஆவணப்பதிவுகளால், சனிக்கிழமைகளிலும் அலுவலகம் செயல்பட வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு நிதியாண்டுக்கான இறுதி மாதமாக இம்மாதம் உள்ளதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணப்பதிவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகமானது செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாடு பதிவு சட்ட விதி 4-ல் கண்ட ‘சிறப்பு அவசரநிலை’ என்ற அடிப்படையில் ஆவண பதிப்பிற்கான கட்டணம் ரூ.200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Categories

Tech |