உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தனது உற்பத்தியை ரஷ்யாவில் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் சோனி நிறுவனம் வீடியோ கேம் பிரியர்கலால் விரும்பி விளையாடப்படும் பிளே ஸ்டேஷன் -5 கன்சோல்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவில் உலகின் இரண்டாவது பெரிய பீர் நிறுவனமான ஹெனிகென் தனது உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் 8,400 ஊழியர்களின் நிலைமையை கருதி கார்லஸ்பெர்க் நிறுவனம் தனது உற்பத்தியை தொடர்வதாகவும், ஆனால் அதில் வரும் லாபத்தை உக்ரைனுக்கு வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.